1) முட்டை உற்பத்தி
முட்டை உற்பத்திதொழிலில் இரண்டு முறைகள் மூலம் தினம், வாரம் , மற்றும் மொத்த முட்டை உற்பத்தி ஆகியவற்றை அளவிடப்படுகிறது. அவைகள் கோழி நாள் முட்டை உற்பத்தி மற்றும் கோழி பண்ணை முட்டை உற்பத்தி ஆகும்.
கோழி நாள் முட்டை உற்பத்தி (HDEP)
ஒரு குறிப்பிட்ட நாளுக்கு
கோழி நாள் முட்டை உற்பத்தி |
= | குறிப்பிட்ட நாளில் மொத்த முட்டை உற்பத்தி | |
x 100 |
|||
அன்றைய நாளில் பண்ணையில் உள்ள கோழிகள் |
|
நீண்ட நாள்களுக்கு
கோழி நாள் முட்டை உற்பத்தி |
= | அந்த குறிப்பிட்ட காலத்தில் கோழிகள் இட்ட முட்டைகள் |
|
x 100 | |||
அந்த குறிப்பிட்ட காலத்தில் உள்ள மொத்த கோழி நாட்கள் |
பொதுவாக கோழி நாள் முட்டை உற்பத்தி சதவீததில் குறிப்பிடப்படுகிறது. இது அறிவியல் ஆராய்ச்சிக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இது பண்ணையில் உள்ள கோழிகளின் உற்பத்தி திறனை அளவாகும். பண்ணையின் சராசரி 85 சதவீத்திற்கு மேல் இருப்பது நல்லது.
கோழி வீட்டு முட்டை உற்பத்தி (HHEP)
ஒரு குறிப்பிட்ட நாளைக்கு
கோழி வீட்டு முட்டை உற்பத்தி |
= |
குறிப்பிட்ட நாளில் இடப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை |
|
x 100 | |||
முட்டை பருவத்தின் தொடக்கத்தில் பண்ணையில் விடப்பட்ட கோழிகளின் எண்ணிக்கை |
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
கோழி வீட்டு முட்டை உற்பத்தி |
= | குறிப்பிட்ட காலத்தில் இட்ட மொத்த முட்டைகள் |
முட்டை பருவத்தின் தொடக்கத்தில் பண்ணையில் விடப்பட்ட கோழிகளின் எண்ணிக்கை |
பொதுவாக இந்த அளவுகள் எண்ணிக்கையில் குறிப்பிடபடுகிறது.கோழி வீட்டு முட்டை உற்பத்தி 80 சதவீதம் அல்லது 295 அதிகமானது நல்லது.
கோழி வீட்டு முட்டை உற்பத்தி உயிருள்ள கோழிகளின் உற்பத்தி திறனை அளவிட ஒரு நல்ல முறையாகும். ஆனால் இதில் முட்டையின் அளவு மற்றும் முட்டையின் தரம் ஆகியவற்றை பற்றி கணக்கில் கொள்வதில்லை. இதைக்கொண்டு முட்டை உற்பத்தியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அளவிடலாம். ஆனால் இது முட்டை உற்பத்தியிலிருந்து கிடைக்கும் லாபத்தை சரியாக அளவிடாது. இது முன்னரே இறந்த கோழிகளின் இறப்பை கணக்கில் எடுத்தக் கொள்வதில்லை. இருந்தபோதிலும் இதுதான் ஒரு நல்ல முட்டை உற்பத்தி திறன் குறியீடு ஆகும். முட்டை உற்பத்தி தொழிலில் இது மிகவும் பயன்படுத்தபடுகிறது.
2) முட்டை நிறை
சராசரி முட்டை நிறை (ஒரு கோழியினால் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டையின் நிறை கிராம்களில்) |
= | முட்டையின் சராசரி எடை (கிராம்களில்) |
3) தீவன மாற்றுத்திறன் (Feed conversion ratio – FCR)
ஒரு கிலோ முட்டை நிறையினை உற்பத்தி செய்யத் தேவைப்படும் தீவன அளவு
தீவன மாற்றுத் திறன் (ஒரு கிலோ முட்டை நிறைக்கு) |
= | தீவனம் உட்கொண்ட அளவு (கிலோக்களில்) |
முட்டை உற்பத்தி (கிலோக்களில்) |
இந்த அளவு 2.2 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் பண்ணைக்கு நல்லதல்ல.
ஒரு டஜன் முட்டையினை உற்பத்தி செய்யவதற்கான தீவன மாற்றுத் திறன்
மேற்கூறிய அளவினைக் கணக்கிடக் கோழிகள் தீவனம் உட்கொண்ட அளவு, முட்டை உற்பத்தி போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோழிகள் உட்கொண்ட தீவன அளவிற்கும், உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கைக்கும் இடையிலுள்ள விகிதம் ஒரு டஜன் முட்டை உற்பத்திக்கான தீவன மாற்றுத்திறனாகும்.
தீவன மாற்றுத் திறன் (ஒரு டஜன் முட்டைகளுக்கு) |
= |
தீவனம் உட்கொண்ட அளவு (கிலோக்களில்) x 12 |
உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை |
இந்த அளவு 1.5 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் பண்ணைக்கு நல்லதல்ல.
4) மொத்த தீவன மாற்றுத்திறன் அளவுகோல் (NFEI)
NFEI |
= |
(EM + BW) x 100 |
FC s |
இங்கு,
EM = ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் நிறை
BW = ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைவு
FC = ஒரு குறிப்பிட்ட காலத்தில் கோழிகள் உட்கொண்ட தீவனத்தின் அளவு (கிராம்களில்)
NFEIமதிப்பு 45 அல்லது அதற்கு மேலும் இருப்பது பண்ணைக்கு உகந்தது.
5) முட்டை;தீவன விலை விகிதம் (EFPR)
முட்டையினை விற்பதால் கிடைக்கும் தொகையினை, செலவினத்தொகையால் வகுப்பதால் கிடைக்கும் விகிதம் முட்டை தீவன விலை விகிதமாகும்.
EFPR |
= | உற்பத்தி செய்யப்பட்ட மொத்த முட்டைகளின் விலை |
உட்கொண்ட தீவனத்தின் விலை |
EFPRவிகிதம் 1.4க்கும் மேல் இருப்பது பண்ணைக்கு உகந்தது.